இத தெளிச்சா பயிர்ல வைரஸ் நோய் வராது…. மாநாடு நடத்தி மாணவர்கள் அறிவுரை…. மதுரையில் விவசாயிகள் மகிழ்ச்சி….!!

மதுரை மாவட்ட வேளாண்மை மருத்துவ கல்லூரி மாணவர்கள் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு மாநாடு நடத்தினர்.

மதுரை மாவட்டத்தில் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது. இதில் பயிலும் மாணவிகள் அலங்காநல்லூருக்கு சென்று விவசாயிகளுக்கு விழிப்புணர்வு மாநாடு நடத்தினர். அதில் மாணவர்கள் விவசாயிகளுக்கு பயிர்களில் பூச்சிகள் மற்றும் நோய் தாக்காமலிருக்க சில இயற்கை முறை மருந்தினை கூறியுள்ளார்கள். அதாவது வேப்ப விதைகளை தூளாக்கி சுமார் 5 கிலோ வீதம் எடுத்துக்கொண்டு அதனை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து  12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் இக்கரைசலை 100 லிட்டர் நீருடன் முறையாக கலந்து வடிகட்டி, பின்னர் பயிர்களுக்கு தெளிக்கலாம்.

இக்கரைசலை பயிர்களில் தெளிப்பதால் அதிலிருக்கும் கசப்புத் தன்மை பயிர்களில் பூச்சிகளை அண்ட விடாது. மேலும் பூச்சிகள் பயிர்களில் அண்டாமலிருந்தால் அதன் மூலம் பரவ கூடிய வைரஸ் நோய்யை கட்டுப்படுத்தலாம் என்று விவசாயிகளுக்கு மாணவிகள் விழிப்புணர்வு மாநாட்டில் கூறியுள்ளார்கள்.