
தமிழ் திரை உலகின் பிரபல நடிகரான விஷால் மற்றும் சந்தானம் இணைந்து நடித்த சுந்தர் சி இயக்கிய திரைப்படம் தான் மதகஜராஜா. 12 வருடங்களுக்கு முன்பு எடுத்து முடிக்கப்பட்ட இந்த படம் நேற்று தான் திரையரங்குகளில் வெளியானது. படத்தின் முதல் காட்சியை பார்த்துவிட்டு சுந்தர் சி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது சந்தானம் குறித்து சுந்தர் சி கூறுகையில், “காமெடியன் சந்தானத்தை எத்தனை வருடங்களாக நான் மிஸ் பண்ணுறேன். இதை சொன்னால் சந்தானம் கோபப்படுவார். ஆனாலும் பரவாயில்லை நான் சொல்றேன், சந்தானம் அவ்வப்போது காமெடி ரோல்களில் நடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.
அதனால் இதனை நான் கோரிக்கையாக சந்தானத்திடம் வைக்கிறேன்” எனக் கூறியுள்ளார். இந்த கோரிக்கையை சந்தானம் ஏற்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.