
பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக ஒரு போட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியை Zerodha இணை நிறுவனர் நிகில் காமத் தொகுத்து வழங்கியுள்ளார். இதன் ட்ரைலர் வீடியோ சமீபத்தில் வெளியான நிலையில் நேற்று இந்த நிகழ்ச்சியின் வீடியோ வெளிவந்தது. அதில் பல்வேறு விஷயங்களுக்கு பிரதமர் மோடி சுவாரசியமாக பதிலளித்த நிலையில் அவரையும் இத்தாலி பிரதமர் மெலோனியையும் தொடர்பு படுத்தி வெளியான மீம்ஸுகள் குறித்து பேசி உள்ளார். அதாவது நிகில் காமத் உங்களுக்கு இத்தாலியைப் பற்றி நிறைய தெரியும் என்றும் அடிக்கடி கூற நிலையில் அதைப்பற்றி ஏதாவது கூற விரும்புகிறீர்களா.
இணையதளத்தில் வந்த அந்த மீம்ஸ்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு மீம்ஸ்கள் எப்போதும் வந்து கொண்டு தான் இருக்கும். நான் அதையெல்லாம் கண்டு கொள்வது கிடையாது. நான் ஒரு உணவுப் பிரியன் கிடையாது எந்த நாட்டுக்கு சென்றாலும் அவர்கள் தரும் உணவை மகிழ்ச்சியோடு சாப்பிடுவேன். என்னிடம் ஒரு மெனுவை கொடுத்தால் என்னால் என்ன சாப்பிட முடியும் என்பதை தீர்மானிக்க முடியாது. நான் ஆர்எஸ்எஸ்-ல் இருந்தபோது மெனுவில் இருக்கும் அந்த உணவும் என் முன்னிருக்கும் உணவும் ஒன்றா என்பது எனக்கு தெரியாது. மேலும் அப்போதெல்லாம் நான் மறைந்த அருண் ஜெட்லியிடம் தான் உணவை ஆர்டர் செய்யுமாறு கூறுவேன் என்று கூறினார்.