இத்தனை கோடியா..? அதிர்ஷ்டம்னா இது தான்.. இந்தியருக்கு வெளிநாட்டில் காத்திருந்த இன்ப அதிர்ச்சி..!!

கேரளாவை சேர்ந்தவருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் லாட்டரியில் 10 கோடி ரூபாய் பரிசுத்தொகை விழுந்துள்ளது. 

கேரளாவில் உள்ள கொச்சின் பகுதியில் வசிப்பவர் ஆன்டனி ஜாய்(39). இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஓமனுக்கு கடந்த 16 வருடங்களுக்கு முன்பே குடியேறியிருக்கிறார். அங்குள்ள கட்டுமான நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுனராக பணிபுரிந்து வரும் இவருக்கு மாதம் 3,000 திர்ஹாம் ஊதியமாக வழங்கப்படுகிறது.

இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிறுவனம் நடத்தும் Mahzooz என்ற லாட்டரியில் கடந்த புதன் கிழமை அன்று இவருக்கு 2 மில்லியன் திர்ஹாம் தொகை பரிசு கிடைத்துள்ளது. அதாவது இதன் மதிப்பு சுமார் பத்து கோடி ரூபாய் ஆகும். இதுபற்றி ஆன்டனி கூறியுள்ளதாவது, இவ்வளவு தொகை கிடைத்தது கனவு போன்று உள்ளது.

என்னால் நம்ப முடியவில்லை. மேலும் நான் டிக்கெட்டை வாங்கும் போது கூட அதிர்ஷ்டம் எனக்கு உள்ளது என்று நினைக்கவில்லை. ஆனால் தற்போது அதிர்ஷ்டம் அடித்துவிட்டது. வங்கியில் நிறைய கடன்கள் வாங்கி இருக்கிறேன். இந்த பணத்தின் மூலம் அதனை அடைத்துவிட்டு, பெற்றோரை கவனித்துக் கொள்ளப்போகிறேன் என்றும் தொண்டு நிறுவனங்கள் சிலவற்றிற்கு நிதி வழங்க போகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் இந்த பணத்தை அவசரமாக செலவழிக்க ட வேண்டாம் என்று நினைக்கிறேன் என்று ஆன்டனி ஜாய் கூறியுள்ளார்.