இதை குழந்தைகள் சாப்பிட்டா அவங்க கதி என்ன?…. நடிகை சாப்பிட்ட தோசையில் தங்க மூக்குத்தி…. பெரும் பரபரப்பு….!!!!

கேரளாவில் கொச்சி காக்கநாடு பகுதியில் சூரிய தாரா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏராளமான மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு திரும்பினார். அப்போது வழியில் எரூர் பகுதியில் உள்ள ஒரு கடையில் நடிகை சூரிய தாரா தோசை மாவு வாங்கி வந்துள்ளார். வீட்டுக்கு வந்ததும் அதனை அவரது தாயார் தோசையாக சுட்டு குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டுள்ளனர்.

அப்போது நடிகை சாப்பிட்ட தோசையில் தங்க மூக்குத்தி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், இந்த தோசையை குழந்தைகள் சாப்பிட்டிருந்தால் உடல் நலனுக்கு பிரச்சனை ஏற்பட்டிருக்கும். தோசை மாவை பேக் செய்யும் போது எதிர்பாராத விதமாக மூக்குத்தி மாவில் விழுந்திருக்கலாம் என்று பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *