இதை கல்லூரி மாணவர்களிடம் விற்கிறாங்க…. 3 பேர் அதிரடி கைது…. போலீஸ் நடவடிக்கை….!!!!!

சென்னை கிண்டி தொழிற்பேட்டை பகுதியிலுள்ள அரசு மற்றும் தனியார் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்தது. அதன்படி அடையாறு போலீஸ் துணை கமிஷனர் மகேந்திரன் உத்தரவின்படி, கிண்டி போலீஸ் உதவி கமிஷனர் சிவா, இன்ஸ்பெக்டர் பிரவின் ராஜேஷ் கொண்ட தனிப் படையினர்போதை மாத்திரையை விற்றதாக பரங்கிமலையை சேர்ந்த லோகேஷ் (27), ஆண்டர்சன் ஜான் (23), ஜெகதீஸ் (20) போன்றோரை கைது செய்தனர்.

இவர்கள் 3 பேரும் கொல்கத்தாவிலிருந்து வலிநிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரைகளாக கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. சென்னையில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையாக தனிப்படை காவல்துறையினர் கடந்த ஒரு வாரத்தில் நடத்திய அதிரடி சோதனையில் திருவல்லிக்கேணியை சேர்ந்த முகமது ஈஷா (26), சைரா அகமதுகான் (30), கோகுல்ராஜ் (22) உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 8½ கிலோ கஞ்சா, 15 கிராம் மெத்தம்பெட்டமைன், 1,200 உடல் வலிநிவாரண மாத்திரைகள், செல்போன், ரூ.75 ஆயிரத்து 760 பணம், மோட்டார்சைக்கிள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *