இதை கட்டாயம் பின்பற்றணும்… மீறினால் நடவடிக்கை பாயும்… உதவி ஆட்சியர் எச்சரிக்கை..!!

முக கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மற்றும் திருமண மண்டபங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று உதவி ஆட்சியர் கூறியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழியில் திருமண மண்டபம், வணிகர் சங்கங்கள், மருந்தகம், உணவகங்களின் உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் நாராயணன் தலைமையில் நடைபெற்றது. அதில் கோட்டாசியரின் நேர்முக உதவியாளர் சண்முகம், தாசில்தார் ஹரிதரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருண், கஜேந்திரன், தேர்தல் துணை தாசில்தார் செந்தில்குமார், சீர்காழி இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அந்த கூட்டத்தில் உதவி ஆட்சியர் நாராயணன் பேசுகையில், வணிக நிறுவனங்களில் பணியாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் முக கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் கிருமிநாசினி மற்றும் சோப்பு கொண்டு கைகளை சுத்தம் செய்திட வசதிகள் செய்திருக்க வேண்டும்.

வாடிக்கையாளர்கள் முக கவசம் அணியாமல் வந்தால் பொருள்கள் வழங்க கூடாது. அதேபோல் சமூக இடைவெளியை பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கு ரூ.500 அபராதமும், முக கவசம் அணியாத வணிக நிறுவனங்களுக்கு ரூ.600 அபராதமும் விதிக்கப்படும். தியேட்டர்களில் பார்வையாளர்களுக்கு 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதிக்க வேண்டும். சமூக இடைவெளியுடன் திருமண மண்டபங்களில் விதிமுறைகளை பின்பற்றி மண்டபங்களை பயன்படுத்திவிட வேண்டும். அவற்றை மீறினால் ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *