
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மத்திய அரசின் புதிய விதிமுறைகளை பின்பற்றி விளம்பரங்களை வெளியிடாவிட்டால் ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேவேளையில் புகழ்பெற்ற பிரமுகர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் செல்வாக்கு மிகுந்தவர்கள் தாங்கள் விளம்பரப்படுத்தும் பொருட்கள் அல்லது அந்த பிராண்ட் மூலம் கிடைக்கும் வருமானம் அல்லது பொருள் ரீதியாக பெறும் பயன் விவரங்களை கட்டாயமாக வெளியிட வேண்டும். விளம்பரங்களில் sponsored, Advertisement, paid promotions ஆகிய விளம்பரங்களை தெளிவாக குறிப்பிட வேண்டும் என கூறியுள்ளது.