இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது தனித்துவமான ஒரு அடையாள ஆவணம் ஆகும். இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது தனித்துவமான ஒரு அடையாள ஆவணம் ஆகும். ஆன்லைன் வாயிலாகவும், இ – சேவை மையங்கள் வாயிலாகவும் ஆதாரை புதுப்பிக்க, முகவரி மாற்ற உள்ளிட்ட பல சேவைகளை பெற்றுக்கொள்ளலாம்.
இந்நிலையில் ஆதார் சரிபார்ப்பு தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை UIDAI வெளியிட்டுள்ளது. ஆஃப்லைன் சரிபார்ப்பு செய்யும் நிறுவனங்கள் கண்டிப்பாக பாதுகாப்பு தரங்களை பின்பற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முடிந்தவரை பயனர்கள் முகமூடி அணிந்த ஆதாரை பயன்படுத்த வேண்டும். 4 முறைகளில் (ஆதார் பிரிண்ட், இ-ஆதார், எம்-ஆதார், ஆதார் பிவிசி) வழங்கப்பட்ட ஆதாரில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து சரிபார்க்க பரிந்துரைத்துள்ளது.