“இது வேற லெவல்”…. வாட்ஸ் அப் வீடியோ காலில் இனி…. செம அப்டேட்…. குஷியில் பயனர்கள்…!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றன. தனது பயனர்களுக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வபோது அசத்தலான அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி வாட்ஸ் அப் வீடியோ காலில் அன்லிமிடெட் அவதார்கள் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் பயனாளர்கள் தங்கள் சொந்த முகத்திற்கு பதிலாக அனிமேஷன் மூலம் முகத்தை மாற்றி வைத்துக் கொள்ளலாம்.

இதற்கான அப்டேட் விரைவில் வரும் என கூறப்படுகிறது. ஏற்கனவே பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் இந்த அப்டேட் வந்துவிட்ட நிலையில் மெட்டா நிறுவனம் தற்போது வாட்ஸ் அப்பில் இந்த புதிய அப்டேட்டை கொண்டு வர முடிவு செய்துள்ளது.விரைவில் ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் சாதனங்களில் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிகிறது.  இந்த அறிவிப்பு வாட்ஸ்அப் பயனர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *