தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு பிறகு லோகேஷ் இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது விஜய்யுடன் இணைந்து தளபதி 67 திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில், தற்போது படத்தின் சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் என பல பிரபலங்கள் நடிக்க இருக்கிறார்கள். இந்நிலையில் சென்னையில் படப்பிடிப்பு முடிந்த பிறகு அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக தளபதி 67 படக்குழு கொடைக்கானல் செல்ல இருக்கிறார்களாம். மேலும் இதைத் தொடர்ந்து காஷ்மீர் செல்ல இருக்கிறார்கள். தளபதி 67 தொடர்பான அப்டேட் அடுத்த 10 நாட்களில் வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே ஒரு பேட்டியில் கூறியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.