இது வேற லெவல்…! தலைவரின் பாட்ஷா 2 படத்தில் கம்மிட்டான தல அஜித்?….. ஏகே 63 குறித்த மாஸ் அப்டேட்…!!

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டாராக வலம் வரும் நடிகர் அஜித் தற்போது துணிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரித்துள்ள நிலையில், கடந்த 11-ம் தேதி துணிவு படம் திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் அஜித் ஏகே 62 திரைப்படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் ஏகே 63 குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. கடந்த 1995-ஆம் ஆண்டு நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான பாட்ஷா திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது.

இந்த படம் பிளாக் பாஸ்டர் ஹிட் ஆன நிலையில், இந்த படத்தின் கதையை மையமாக வைத்து இயக்குனர் விஷ்ணுவர்தன் பாட்ஷா 2 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தை எடுப்பதற்காக சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திடம் இயக்குனர் விஷ்ணுவர்தன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் பாட்ஷா 2 திரைப்படத்தில் நடிகர் அஜித் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக வெளிவந்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.