தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்குப் பிறகு லோகேஷ் இயக்கிய கைதி, மாஸ்டர், விக்ரம் என 4 படங்களுமே சூப்பர் ஹிட் ஆனது. இப்படி 4 சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜின் திரைக்கதைகள் தற்போது புத்தக வடிவில் வந்துள்ளது.

இந்த புத்தகங்கள் சென்னை புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த புத்தகங்கள் இளம் இயக்குனர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதேபோன்று நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் படத்தின் திரைக்கதையும் புத்தகமாக வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.