தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆனதன் காரணமாக தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு வந்து சென்னையில் உள்ள வெற்றி திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து வாரிசு திரைப்படத்தை பார்த்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படத்தை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்து எங்கு சென்றாலும் பொங்கலுக்கு சென்னைக்கு தானே வந்து ஆக வேண்டும் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் தளபதி விஜய்க்கு தீவிர ரசிகை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். மேலும் நடிகர் விஜயுடன் சேர்ந்து கீர்த்தி சுரேஷ் பைரவா மற்றும் சர்க்கார் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.