இது வந்ததுனால வசமா சிக்கிருக்கு…. பறக்கும் படை அதிகாரியின் தகவல்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரை மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததிலிருந்தே இதுவரை பறக்கும் படையினர் 23,22,800 ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு அனைத்துப் பகுதிகளிலும் தேர்தல் விதிமுறைகளை அமலுக்குக் கொண்டு வந்தது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததிலிருந்து இதுவரை பறக்கும் படையினரால் 23,22,800 ரூபாயும், காரும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

மேலும் மதுரையில் தேர்தல் விதிமுறைகளை மீறி பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டதாக கூறி அ.தி.மு.க, தி.மு.க மற்றும் சில கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்களின் மீது இதுவரை சுமார் 73 வழக்கு பதிவுகள் பதிவாகியுள்ளது என்று உசிலம்பட்டியிலிருக்கும் தேர்தல் நடத்தும் அலுவலரான ராஜ் என்பவர் தெரிவித்துள்ளார்.