இது யாருன்னு தெரியலயே..! அழுகிய நிலையில் கிடந்த சடலம்… போலீஸ் தீவிர விசாரணை..!!

பெரம்பலூரில் உடல் அழுகிய நிலையில் கிடந்த மூதாட்டி குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நாரணமங்கலம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை ஒன்று உள்ளது. இங்கு 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தொழிற்சாலைக்கு பின்புறத்தில் உள்ள வாரியில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். அதனைக் கண்ட பொதுமக்கள் பாடாலூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையினர் பார்வையிட்டனர்.

அப்போது உடல் அழுகிய நிலையில் அந்த மூதாட்டி கிடந்துள்ளார். மேலும் அந்த மூதாட்டி எந்த ஊரை சேர்ந்தவர் ? யார் ? என்பது பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை. இதையடுத்து காவல்துறையினர் அந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *