இது யாராக இருக்கும்…? பொதுமக்கள் அளித்த தகவல்… போலீஸ் விசாரணை…!!

ஆற்றங்கரை அருகே சடலமாக மீட்கப்பட்ட வாலிபரின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் பகுதியில் இருக்கும் வைகை ஆற்று பாலத்தின் அருகில் ஒருவர் எரிந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்தவரின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சடலமாக மீட்கப்பட்ட வாலிபரின்  விவரம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *