தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் அஜித் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் மூன்றாவது முறையாக துணிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மஞ்சுவாரியர் கதாநாயகியாக நடிக்க சமுத்திரக்கனி, ஜான் கொக்கன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த 11-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வசூல் சாதனை புரிந்து வருகிறது. இந்த படம் வங்கியில் நடக்கும் ஊழல்கள் மற்றும் திருட்டு போன்றவற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது.‌

இந்நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் மற்றும் டிஎஸ்பி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம் துணிவு படத்தை பாராட்டி ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் துணிவு செம்ம. அஜித் குமார் சார் பர்ஃபார்மன்ஸ் வேற லெவல். எச். வினோத் ஸ்கேம் கான்செப்ட் சூப்பர். இது மக்களுக்கான விழிப்புணர்வு படம்னு சொல்லலாம். வாழ்த்துக்கள் துணிவு படக்குழு என்று பதிவிட்டுள்ளார். மேலும் துணிவு படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் விக்னேஷ் சிவனும் படத்தை பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.