பெங்களூருவில் இளம்பெண்ணின் தாயார் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி வருகின்றன. பிசியோதெரபிஸ்டாக பணிபுரியும் குற்றம் சாட்டப்பட்ட சொனாலி சென் என்ற இளம்பெண் அவரது தாயார் பிவாபால் (வயது 71) அவருக்கு உணவுடன் 30 பிபி மாத்திரைகளை கட்டாயப்படுத்தி விழுங்க செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்பிறகு தாயார் உடல் நிலை பாதிக்கப்பட்டு கீழே மயங்கி விழுந்து, கழுத்து நெரித்து கொல்லப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. வங்காளத்தைச் சேர்ந்த செனாலி சென் ஜூன் 12 ஆம் தேதி திங்கள்கிழமை அன்று தகராறு செய்து தனது தாயைக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.