இது தான் நம்ம கெத்து….. 12 எழுத்தில்…. மொத்த வாழ்க்கையும் அடக்கிய தமிழ்….!!

உலகில் எத்தனை மொழிகள் இருந்தாலும், தமிழ் மொழியின் சிறப்பை மிஞ்சிவிட முடியாது. அதற்கு உதாரணமாக ஒரு சில தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

 தமிழின் உயிரெழுத்தில் ‘அ’ வுக்கு அடுத்து ‘ஆ’ என்ற எழுத்து வருவது ஏன்? 

அரசனும், ஆண்டியாகலாம் என்பதை அறிந்திட!!

‘இ’ வுக்கு அடுத்து ‘ஈ’ என்ற எழுத்து வருவது ஏன்?  

இருப்பவன் ஈய வேண்டும் என இயம்பிட!! 

‘உ’ வுக்கு அடுத்து ‘ஊ’ என்ற எழுத்து வருவது ஏன்? 

உழைப்பே ஊக்கம் என உணர்த்திட!!  

‘எ’ வுக்கு அடுத்து ‘ஏ’ என்ற எழுத்து வருவது ஏன்? 

எதையும் ஏன் என்று சிந்தித்துப் பார்க்க!!

 ‘ஐ’ மட்டும் எதோடும்  சேராமல் தனித்து இருப்பதேன்? 

அதற்கு நான் ‘ஐ’ என்ற அகம்பாவம் இருந்தால் தனிமைப்படுத்தப்படுவாய்  என்பதனை உணர்த்த! 

‘ஒ’ வுக்கு அடுத்து ‘ஓ’ என்ற எழுத்து வருவது ஏன்? 

ஒற்றுமையே ஓங்கும் என்பதை உணர்த்திட!! 

எனவே நான் (ஐ) தான் என்கிற குணம், ஒரு மனிதனை தனிமைப்படுத்தி ஒரு பெரிய பள்ளத்தில் தள்ளிவிடும். உயிர் எழுத்துக்கள் 12 இல் மொத்த வாழ்க்கையுமே வரையறுத்துவிட்டது நமது தமிழ்மொழி. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *