இது காசுக்கு மாரடிக்கும் கூட்டம் அல்ல… கமல்ஹாசன் அதிரடி டுவிட்…!!!

அரசியல் கட்சிகள் பணம் கொடுத்து ஆட்களைக் கூட்டி வருவதாக விமர்சித்த நிலையில் கமல்ஹாசன் அதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சிகளையும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளன.

இந்நிலையில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “கூடி கலையும் கும்பல் அல்ல. கூட்டி வரப்பட்ட கூட்டமும் அல்ல. இது சரித்திரம் படைத்த துணிந்தவர்களின் சங்கமம். நாமே தீர்வு என்னும் முழக்கம் எம் சங்க நாதம். புதியதோர் புதுவை செய்வோம்” என்று அவர் தெரிவித்துள்ளார். சில அரசியல் கட்சிகள் பணம் கொடுத்து ஆட்களைக் கூட்டி வருவதாக விமர்சித்து வருகின்ற, இந்த கருத்தை கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.