இறந்தவர்களை உயிருடன் வர வைப்பது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று என்பதை அனைவரும் அறிந்தது தான். ஆனால் ஜெர்மன் நாட்டை சேர்ந்த மருத்துவ ஆய்வாளர்கள் இறந்தவர்களை உயிருடன் கொண்டு வரும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக மிகவும் குளிர்ந்த சூழலில் உயிரிழந்தவர்களின் உடல்களை பாதுகாப்பாக வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த ஆய்வுக்கு குறித்து கேள்விப்பட்ட பொதுமக்கள் சிலர் தங்கள் உடலை தானமாக கொடுக்க முன்வந்துள்ளனர்.

எதிர்காலத்தில் மருத்துவத் தொழில்நுட்பம் வளர்ந்து இறந்த உடல்களை உயிருடன் கொண்டு வந்தால் அப்போது தாங்கள் உயிருடன் வந்து விடுவோம் என மக்கள் நம்புவதாக கூறியுள்ளனர். இந்த ஆய்வு தற்போது தான் தொடங்கியுள்ளது. இது எந்த அளவிற்கு வெற்றி பெறும் என்று தெரியவில்லை என்றாலும் மக்கள் பலரும் இந்த ஆய்வுக்கு உதவுகின்றனர்.