இந்தியாவில் போக்குவரத்து சட்டங்கள் கடுமையாகப் பட்டாலும் அதனை சிலர் பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் விதிமீறலில் ஈடுபடுகின்றனர். இந்திய அளவில் சாலை விபத்துக்கள் பெரும்பாலும் அதிகரித்து வருவது போக்குவரத்து விதிமீறல்களால் தான்.

இந்த நிலையில் உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஹாப்பூர் என்ற பகுதியில் ஒரே பைக்கில் ஏழு பேர் பயணம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதனைத் தொடர்ந்து பைக்கில் ஆபத்தான முறையில் பயணம் செய்தவர்களுக்கு போலீசார் 9,500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இதே ஊரில் கடந்த ஆண்டு ஒரே பைக்கில் ஏழு பேர் பயணித்த போது 22,000 அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.