விஜய் டிவியில் தொகுப்பாளனியாகவும்,போட்டியாளர் மற்றும் சப்போர்ட்டிங் நடிகையாகவும் பணியாற்றி மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் அறந்தாங்கி நிஷா. இவர் நிறத்தைப் பார்த்து பல இடங்களில் நிராகரிக்கப்பட்டாலும் தனது தனி திறமையால் மீடியா துறையில் தற்போது மிளிர்ந்து கொண்டிருக்கிறார். தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து பிபி ஜோடிகள் மற்றும் பிக் பாஸ் என பல திறமைகளால் இன்று மக்கள் மத்தியில் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

வெள்ளி திரையிலும்  இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. என் நிலையில் நேற்று காதலர் தினம் என்பதால் தன்னுடைய கணவரை தூக்கிப் படி இருக்கும் புகைப்படத்தை போட்டு ஒரு பதிவை பகிர்ந்து உள்ளார். அந்தப் பதிவில் என்னுடைய வாழ்க்கையை தூக்கியவர் என்னுடைய கணவர் தான் எனக் குறிப்பிட்டு அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.