இது எங்க திருவிழா…. மகிழ்ச்சியோடு அழைத்த குரங்குகள்….!!!!

தாய்லாந்தில் நடைபெற்ற குரங்கு திருவிழாவை சுற்றுலா பயணிகள் உற்சாகமாக கண்டுகளித்தனர்.

தாய்லாந்தின் பிரபலமான குரங்கு திருவிழா, கொரோனானோ தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது. தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ளதால் இந்த ஆண்டு குரங்கு திருவிழா மத்திய தாய்லாந்தில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த விழாவில் சுமார் 2 டன் பழங்கள் மற்றும் காய்கறிகளை 1000-க்கணக்கான குரங்குகள் உண்டு மகிழ்ந்தனர். மக்காக்கள் என்று அழைக்கப்படும் நீண்ட வால் குரங்குகள் காய்கறிகள் மற்றும் பழங்களின் மீது ஏறி வாழைப்பழங்கள் மற்றும் அன்னாசிப் பழங்களை உண்டனர். இதனை சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *