இது அல்லவா தாய் மனம்…! மண்ணுக்குள் புதைந்த குட்டிகளை மீட்க போராடும் நாய்… கண்களை கலங்க வைக்கும் வீடியோ…!!

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6 மற்றும் 7-ம் தேதிகளில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 11,200 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டும் என அஞ்சப்படுகிறது. அதன்பிறகு நிலநடுக்கத்தில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிலையில் பலர் இடிபாடுகளில் சிக்கி உள்ளதால் அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் பிறகு நிலநடுக்கத்தில் சிக்கிய ஒரு சிறுமி தன்னுடைய தம்பியின் உயிரை காப்பதற்காக தன்னுடைய தம்பியின் தலையில் கையை வைத்துக்கொண்டு தன்னை காப்பாற்ற வந்தவரிடம் பேசும் ஒரு வீடியோ வைரலானது. இடிபாடுகளில் சிக்கிய அந்த சிறுமியும் அவரது தம்பியும் 17 மணி நேரம் கழித்து மீட்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான வீடியோ வைரலாகி பலரது மனதையும் உருக வைத்தது. இந்நிலையில் மண்ணுக்குள் புதையுண்டு  சிக்கிக்கொண்ட தன்னுடைய நாய்க்குட்டிகளை ஒரு நாய் போராடி மீட்கும் ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதாவது குட்டி நாய்கள் மண்ணுக்குள் சிக்கிய நிலையில், தன்னுடைய குட்டிகளை மீட்க ஒருவரை நாய் அழைத்து வருகிறது. அந்த நபரும் நாய் சொன்ன இடத்தில் வந்து குழியை தோண்டுகிறார். அவருடன் சேர்ந்து நாயும் குழி தோண்டிய நிலையில் அவர் சிறிது நேரத்தில் ஒரு குட்டியை மீட்கிறார். அந்த குட்டியை நாய் வாங்கிக்கொள்ள மீண்டும் அந்த நபர் தோண்ட மற்றொரு நாய்க்குட்டியும் வெளியே வருகிறது.

அந்த 2 நாய் குட்டிகளையும் தாய் நாய் வாங்கிக் கொண்டு அன்போடு அரவணைத்து பாலூட்டுகிறது. இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி பார்ப்போரின் கண்களை கலங்க வைத்துள்ளது. மேலும் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டு பலர் இடிபாடுகளில் சிக்கி போராடிவரும் நிலையில், தற்போது தன்னுடைய குட்டிகளை ஒரு நாய் மீட்கும் பழைய வீடியோவானது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம்  நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவில் நடந்த நிலையில் துருக்கி சம்பவத்தை காரணம் காட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.