இது அனைத்தும் வெளிநாட்டு சதி…. நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட “பாகிஸ்தான் முன்னாள் அதிபர்”….!!!!!

பிரபல நாட்டின்  முன்னாள் அதிபர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார்.

பாகிஸ்தான் நாட்டில் உள்ள  நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதனால் அப்போது பிரதமராக இருந்த இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதனைத் தொடர்ந்து புதிய பிரதமராக  ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் முன்னாள் அதிபர் இம்ரான் கான் தனது ஆட்சி கவிழ்ப்பில் வெளிநாட்டு சதி இருப்பதாக கூறி அரசுக்கு எதிராக தனது கட்சியின் ஆதரவாளர்களுடன்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த போராட்டத்தின் பொழுது தனது நெருங்கிய ஆதரவாளர்களை கைது செய்து தாக்குதல் நடத்திய போலீஸ் அதிகாரிகள் மற்றும் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்ட பெண் நீதிபதி ஆகியோரை மிரட்டும் வகையில் பேசினார். இதனால் இம்ரான் கான் மீது நீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அவர்  தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டார். அதன்பின்னர் இவர் மீது தொடரப்பட்ட  வழக்கை  ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.