தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியின் போது சம்பிரதாயத்துக்காக மட்டும் எல்லாம் செய்கிறார்கள் என்று திமுகவை விமர்சித்தார். அதாவது ‌ சம்பிரதாயத்துக்காக ட்வீட் போட்டு, சம்பிரதாயத்துக்காக மழை நீரில் நின்று  போட்டோ சூட் நடத்தி என்று விமர்சித்த விஜய் சில சமயங்களில் நாமும் சம்பிரதாயத்துக்காக அதையெல்லாம் செய்ய வேண்டி இருக்கு என்று கூறினார்.

இந்நிலையில் தற்போது வலைதளத்தில் உதயநிதி ஸ்டாலின் டாக்டர் அம்பேத்கர் படத்துக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தியதை பதிவிட்டு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இதனை பகிர்ந்த தவெக ஆதரவாளர் ஒருவர் இதுவரை அம்பேத்கர் பற்றி சம்பிரதாயத்துக்காக ட்வீட் மட்டும் போட்டவங்க தற்போது நேரில் சென்று மரியாதை செலுத்தியுள்ளனர். மேலும் இதுதான் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்க்கு கிடைத்த மரியாதை என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு திமுகவினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.