இதுல ஏறி இவருக்கு இப்படி ஆயிடுச்சே…. வாலிபருக்கு நேர்ந்த சோகம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

நெல்லையில் வாலிபர் மரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் மருதுடையார் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியில் வேப்பம் மரம் அமைந்துள்ளது. இதனை வெட்டுவதற்காக மருதுடையார் மரத்தின் மீது ஏறியுள்ளார். அப்போது நிலைதடுமாறிய அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் கீழே விழுந்தார்.

இச்சம்பவத்தில் பலத்த காயமுற்ற அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு மருத்துவர்கள் அவருக்கு அளித்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வீரவநல்லூர் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.