“இதுதாங்க தரமான அணி”…. ஒரே டீம்ல இத்தனை ஆல்ரவுண்டரா?…. ஆகாஷ் சோப்ரா கருத்து…!!!

ஐபிஎல் கிரிக்கெட்  15 வது சீசனுக்கான மெகா  ஏலம் கடந்த 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற்றுள்ளது. இதில் மொத்தம் 590 வீரர்கள் பங்கேற்ற நிலையில், 204 பேர் மட்டுமே ஏலம் போயுள்ளனர். இதில் வெளிநாட்டு வீரர்கள் 67 பேரும், உள்  நாட்டு வீரர்கள் 127 பேரும் ஆகும்.  இவர்களது மொத்த மதிப்பு 551.70 கோடி ரூபாயாகும். சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், என எல்லா  அணிகளும் தலா 25 பேரை வாங்கியுள்ளனர். குறைந்தபட்சமாக லக்னோ அணி  21 பேரை வாங்கியுள்ளது.

இந்நிலையில் ஆகாஷ் சோப்ரா எந்த அணி சரியான அளவில் பணத்தை வைத்து வீரர்களை வாங்கி உள்ளது என கணித்து கூறியுள்ளார். அதில் “என்னை பொருத்தவரை ஏலத்தில் சிறப்பாக செயல்பட்ட அணி என்றால் அது லக்னோ சூப்பர் ஜெயிண்ட் தான்.  அவங்ககிட்ட இருந்து மொத்த தொகையும் செலவு செஞ்சு வீரர்களை வாங்கி இருக்காங்க எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர்கள் கே.எல்.ராகுல், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், ரவி பிஷ்னோய் ஆகியோரில்  யாரை வாங்குவது என குழப்பத்தில் தான் இருப்பார்கள். ஆனால் இந்த அணி  இருவரையும் தட்டி தூக்கி உள்ளது . மேலும் இந்த அணி 29 வயதாகும் ஓபனில் குயின்டன் டி காக் வாங்கியுள்ளது.  இவருக்கு 6.75 கோடி கொடுத்தது சரியான முடிவுதான். மணிஷ் பாண்டே, ராகுல் தேவத்தியா, தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, க்ருனால் பாண்டியா போன்ற  திறமையாளர்களை அந்த அணி  வாங்கியுள்ளது. எந்த அணியும் இப்படி ஒரு ஆல்ரவுண்டர் படையை வைத்திருக்கவில்லை எனக் கூறினார். இதனால் லக்னோ அணியின் பிளேயிங் லெவெல் தான் சிறப்பாக இருக்கிறது. அந்த அணியின்  தேர்வில் குழப்பம் வர வாய்ப்பில்லை எனவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *