இதுக்குதான் வச்சிருக்கேன்…. வசமாக சிக்கிய வாலிபர்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

அண்டக்குளத்தில் வாகன சோதனையின் போது உரிய ஆவணம் இல்லாததால் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பறக்கும் படை அதிகாரிகள்  தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அண்டக்குளம் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் 2  லட்சம் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து காரில் இருந்தவரிடம் விசாரணை செய்தபோது, அவர் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் என்பதும், வாகனம் வாங்குவதற்கான அந்தப் பணத்தை எடுத்துச் செல்வதாக கூறியுள்ளார். ஆனால் அதற்கான உரிய ஆவணம் ஏதும் இல்லாத காரணத்தினால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து புதுக்கோட்டை சட்டமன்ற தேர்தல் அதிகாரி டெய்சியிடம்  ஒப்படைத்துள்ளனர்.