இதற்கான வரியை ரத்து செய்ய முடியாது…. முதல்வர் திட்டவட்டம்…!!!!

1990 காலகட்டத்தில், காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்துக்கள் குறித்த படம் தான்,காஷ்மீர் பைல்ஸ் என்ற படம்.  இப்படம்  இந்தியாவில் தேசிய அளவில் பேசுபொருளாகியிருக்கிறது. அதிலும் குறிப்பாக, ஆளும் பாரதிய ஜனதா கட்சி இந்தப் படத்திற்கு துணை நிற்கிறது. இந்நிலையில் காஷ்மீர் பைல்ஸ் படத்துக்கு வரி ரத்து செய்ய முடியாது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

மேலும் இப்படத்தை எல்லோரும் பார்க்க வேண்டும் என பாஜக விரும்பினால் இலவசமாக யூடியூபில் வெளியிடுங்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் எதற்காக நாங்கள் வரியை தள்ளுபடி செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பி உள்ளார். இதையடுத்து பாஜக தொண்டர்களே, உங்கள் அறிவை திறந்து சிந்தியுங்கள் என்று கூறிய டெல்லி முதல்வர், யாரோ ஒருவர் சம்பாதிக்க உங்களை போஸ்டர் ஒட்ட சொல்கிறார்கள். எனவே உங்களை ஆட்டுமந்தை போல் நடத்துகிறார்கள். ஆகவே சிந்தியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *