இதய அறுவை சிகிச்சை நடந்த போது.. தீ பிடித்து எறிந்த மருத்துவமனை.. உயிரை பணயம் வைத்து வென்ற மருத்துவர்கள்..!!

ரஷ்யாவில் ஒரு மருத்துவமனையில் நோயாளிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை நடந்த போது மருத்துவமனை தீ பற்றி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ரஷ்யாவில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் ஆபத்து நிறைந்த பைபாஸ் அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது நோயாளியினுடைய மார்பு மருத்துவர்களால் வெட்டி திறக்கப்பட்டுக்கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று அந்த மருத்துவமனையில் தீப்பற்றி எரிந்துள்ளது.

இதனால் உடனடியாக மருத்துவமனையிலிருந்த நோயாளிகள் மருத்துவர்கள் உட்பட அனைவரும் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த தலைமை மருத்துவர் Valentin (29) என்பவர் மட்டும் மருத்துவமனையில் இருந்து வெளியேற மறுத்துள்ளார்.

இதனால் அவரின் சக மருத்துவர்கள் விசிறிகளை வைத்து புகையை வெளியேற்றிக் கொண்டிருக்க, அசராமல் அந்த மருத்துவர் மற்றும் அவரது குழுவினர் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்துவிட்டனர். இது குறித்து தலைமை மருத்துவர் Valentin கூறியுள்ளதாவது, நாங்களும் மனிதர்கள் தானே எங்களுக்கும் பயமாக இருந்தது.

எனினும் அறுவை சிகிச்சையை தொடர்ந்து மேற்கொண்டோம். அது மிகவும் ஆபத்தான பைபாஸ் அறுவை சிகிச்சை, வேறு என்ன செய்ய முடியும் என்று கூறியுள்ளார். அறுவை சிகிச்சை முடிவடைந்த பின்பு அந்த நோயாளி வேறு ஒரு மருத்துவமனைக்கு உடனடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் Valentin, அவரது சக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. மேலும் நல்ல வேளையாக தீ விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.