“இதயத்தை இழந்த காதலிக்காக உயிரைக் கொடுத்த காதலன்…!!” கண்ணீர் வர வைக்கும் நெகிழ்ச்சி சம்பவம்….!!

கள்ளக்குறிச்சியை அடுத்த மேலத்தேனூர் ஒரு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் என்ற 26 வயது இளைஞன்.. இவருக்கு முகநூல் மூலம் பூமிகா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். தொடர்ந்து இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப்போகவே தீவிரமாக காதலிக்க தொடங்கினார். ஆனால் இருவரும் ஒருமுறைகூட நேரில் சந்தித்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பூமிகா திடீரென இதயநோயால் மரணமடைந்து விட்டார். இதனால் பூமிகாவை தொடர்பு கொள்ள இயலாமல் மணிகண்டன் தவித்து வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் பூமிகாவின் மொபைல் எண்ணிற்கு போன் செய்துள்ளார்.

அப்போது அவருடைய பாட்டி அந்த போனை எடுத்து பேசியுள்ளார். தொடர்ந்து மணிகண்டன் பூமிகா குறித்து விசாரித்துள்ளார். இந்நிலையில் பூமிகா இதய நோயால் மரணம் அடைந்தது குறித்து பூமிகாவின் பாட்டி மணிகண்டனிடம் தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த மணிகண்டன் விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளார். இதனை எடுத்து மணிகண்டனின் தந்தை சக்திவேல் இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.