“இதனால் மற்ற நாடுகளும் பாதிக்கப்படும்”…. வெளிப்படையாக போட்டுடைத்த முன்னாள் ரஷ்ய அதிபர்….!!

ரஷ்யாவின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் கட்டுப்பாடுகள் சில நாடுகளின் பணம் மற்றும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் என்று அந்நாட்டின் முன்னாள் அதிபர் கூறியுள்ளார்.
ரஷ்யா மீது விதிக்கப்படும் பொருளாதார தடையினால் ஏற்படும் தாக்கமானது உலகம் முழுவதும் உணரப்படும் என்று முன்னாள் ரஷ்ய  அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டெலிகிராம்  சேனல் வழியாக  அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, “ரஷ்யா  நாட்டின் மீது விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகள் மிகப்பெரிய அளவிலான உலகளாவிய விளைவுகளை ஏற்படுத்தும்.  இந்த தடைகளின் விளைவுகளை உலகம் முழுவதும் சந்திக்க நேரிடும்.  இந்த விநியோகச் சங்கிலிகள், பணவீக்கம் மற்றும் உணவு நெருக்கடி போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த கட்டுப்பாட்டு நடவடிக்கை உலகளாவிய நிதி அமைப்பிற்கு தீங்கு விளைவிக்கும்.
இந்த  கட்டுப்பாடு நடவடிக்கைகள் சில நாடுகளில் பண மற்றும் நிதி நெருக்கடியை உண்டாக்கும்.  இதன் விளைவாக பல தேசிய நாணயங்களின் ஸ்திரத்தன்மை குறைமதிப்பிற்கு உட்பட்டுள்ளது. இதனால் பரவலான பணவீக்கம் விலைவாசி உயரும்.
இன்னும் புதிய  பகுதிகளில் இராணுவ மோதல்கள் வெளிப்படும்.  ரஷ்யாவுடனான இந்த மோதலால் மேற்கத்திய நாடுகள் தற்போது திசை திருப்பப்படுவதாக பயங்கரவாதிகள் நினைக்கிறார்கள். ஆகவே, தீவிரவாதிகள் செயலில் இறங்குவார்கள். மேலும் அமெரிக்கா நாட்டை மையமாகக் கொண்ட இந்த உலகின் யோசனைகளில் சரிவு ஏற்படும்” என்று அவர் கூறியுள்ளார்.