இணையத்தில் மீம்ஸ்களில் வடிவேலுக்கு அடுத்தபடியாக இவர்தாங்க..! இவர் லேசுபட்டவர் இல்லங்க

இணையத்தில் மீம்ஸ்களின் கிங் என்றால் அது நடிகர் வடிவேலு தான் அவரை மிஞ்ச வேறு யாரும் இல்லை என நெட்டிசன்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில் இவருக்கு  அடுத்த படியாக மீம்ஸ்களில் அதிகமாக உபயோகிக்கப்பட்ட யார் என்று பார்த்தால் ஒசிட்டா ஐஹூம் ஆவார்.

இவரின்  புகைப்படத்தை மீம்ஸ்களுக்கு பயன்படுத்துபவர்களுக்கு கூட இவர் யாரென்று தெரியாது. இந்நிலையில் ஒசிட்டா ஐஹூம் தனது 38 வது பிறந்தநாளை அண்மையில் கொண்டாடினார்.  பெரும்பாலானோர் நினைப்பது போல இவர் சிறுவன் கிடையாது 1982 ஆம் ஆண்டில் பிறந்தவர்.

மேலும் தனது 16 வயதிலேயே 1998-ல்  ஆப்பிரிக்காவின் ஆஸ்கார் எனப்படும் ஆப்பிரிக்கன் மூவி அகடமியின் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றார். 2011 ஆம் ஆண்டில்  நைஜீரிய திரைப்படத் துறையில் அவர் அளித்த பங்களிப்புக்காக ஃ பெட் ரல்  குடியரசு விருது அந்த   அரசால் வழங்கப்பட்டது.

இந்நிலையில் அண்மையில் அவரது   பிறந்த நாளுக்கு உலகம் முழுதும் உள்ள ரசிகர்கள் வாழ்த்துக்கள் பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *