விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. இது பாமக வேட்பாளருக்கு சாதகமான முடிவாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.  விக்கிரவாண்டி தொகுதியில் 2011 இல் அதிமுக கூட்டணி, 2016 இல் திமுக, 2019 இல் இடைத்தேர்தல் அதிமுக, 2021 இல் திமுக என மாறிமாறி வெற்றிபெற்று வந்தன. சராசரியாக அதிமுகவுக்கு 75,000க்கும் மேற்பட்ட வாக்குகள் உள்ளன.

ஆனால், இந்த இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை என்பதால் அக்கட்சியினர் திமுகவுக்கு வாக்களிக்க வாய்ப்பில்லை. இதனால், அதிமுக வாக்கு மறைமுகமாக அதிகளவில் பாமகவுக்கு செல்ல வாய்ப்புள்ளது. மேலும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்து,NDA கூட்டணியில் உள்ள பாமகவுக்கு அதிமுக மறைமுக அழைப்பு விடுப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அதிமுக கூட்டணியில் பாமக மீண்டும் இணையுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.