ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்றுடன் பரப்புரை முடிவடைகிறது. இதையடுத்து அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் ஒருபுறம் உச்சக்கட்டம் அடைந்திருக்க மறுபுறம் பட்டுவாடா பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. முன்னதாகவே வெள்ளி கொலுசு, ஸ்மார்ட்வாட்ச், பணம் உள்ளிட்டவை பட்டுவாடா செய்வதாக புகார் எழுந்த நிலையில், தற்போது வாக்காளர்களுக்கு அரசியில் கட்சியினர் வீடு வீடாக சென்று அரசி மூட்டைகள் வழங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.