இடிந்து விழுந்த நூலக கட்டிடம்…. 90 ஆயிரம் புத்தகங்கள் சேதம்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

நூலக கட்டிடம் இடிந்து விழுந்ததால் 90 ஆயிரம் புத்தகங்கள் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் கிளை நூலக கட்டிடம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த கட்டிடம் 46 ஆண்டுகள் பழமையானது ஆகும். கடந்த சில நாட்களாக அப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று மாலை நூலகர் கிளமெண்ட், ஊழியர் ஆரோன் ஆகியோர் நூலக பதிவேடுகளை சரி பார்த்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக நூலக கட்டிடம் இடிந்து விழுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த இருவரும் அலரியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

இதுகுறித்து அறிந்த கூடலூர் ஆர்.டி.ஓ சரவணன், தாசில்தார் சித்தராஜ், தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நூலகத்தில் இருந்த கணினிகள் உள்ளிட்ட பதிவேடுகளை மற்றொரு கட்டிடத்தில் மாற்றி வைத்தனர். இதனை அடுத்து தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தீயணைப்பு படையினர் உதவியுடன் பொக்லைன் எந்திரம் மூலம் இடிபாடுகள் அகற்றப்பட்டு புத்தகங்கள் வேறு கட்டிடத்திற்கு மாற்றி வைக்கப்பட்டது. கட்டடத்தின் பெரும்பாலான பகுதி இடிந்து விழுந்த நேரத்தில் வாசகர்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *