நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படம் இன்று(பிப்,.17) ரிலீஸ் ஆகியுள்ளது. இப்படத்தை தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கி உள்ளார். இந்த படம் தனியார் பள்ளிகள் மற்றும் கல்வி பற்றி பேசியுள்ளது. இதற்கிடையில் வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லுரியின் சர்ச்சை பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.

அதாவது சமீபத்திய பேட்டி ஒன்றில் வெங்கி அட்லுரியிடம், மத்திய அமைச்சரானால் என்ன செய்வீர்கள்? என கேட்கப்பட்டது. அதற்கு, “நான் ஒருவேளை மத்திய கல்வி அமைச்சரானால் இடஒதுக்கீட்டை ஒழித்துவிடுவேன். இடஒதுக்கீட்டை பொருளாதார அடிப்படையில் வழங்கவேண்டும். சாதி அடிப்படையில் வழங்கக்கூடாது என மாற்றுவேன்” என்று இயக்குனர் வெங்கி அட்லுரி கூறினார். இந்த பேச்சுக்கு தற்போது கண்டனங்கள் குவிந்து வருகிறது.