இங்க வரும்போது கட்டாயமா இத போட்டுட்டு தான் வரணும்…. மாவட்ட கலெக்டர் அறிக்கை…. மதுரையில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்….!!

மதுரையில் பொதுமக்கள் ஓட்டு போட செல்லும்போது முக கவசம் கட்டாயமாக அணிந்திருக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அறிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனடிப்படையில் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் வேலை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தின் கலெக்டரான அன்பழகன் சில முக்கிய அறிக்கையை விடுத்துள்ளார். அதில் அவர்  வாக்களிக்க வரும் பொதுமக்களும், தேர்தல் பணியில் ஈடுபடுவோரும் முகக் கவசம் கட்டாயமாக அணிந்திருக்க வேண்டும் என்றார்.

மேலும் தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருத்தல் போன்று சில முக்கிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இதனையடுத்து அவர் வாக்காளர் அட்டை இல்லையெனில் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் 11 வகையான மாற்று புகைப்படமிருக்கும் அட்டைக்களில் ஒன்றை கொண்டு சென்று வாக்களிக்கலாம் என்றும் அறிக்கையில் கூறினார்.