இங்க மழை வர வேண்டும்….. நூதன முறையில் வழிபாடு…. விவசாயிகளின் கோரிக்கை…!!

கிராம மக்கள் நூதன முறையில் வழிபாடு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாவில்பட்டி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இங்கு வசிக்கும் விவசாயிகள் கொடும்பாவியை தெருக்களில் இழுத்து வந்து ஒப்பாரி வைத்து உள்ளனர். அதன் பிறகு அவர்கள் நூதன முறையில் மழை வரவேண்டி முச்சந்தியில் அதனை தீ வைத்து எரித்து வழிபாடு நடத்தியுள்ளனர்.

இந்த வழிபாட்டு நிகழ்ச்சியில் பஞ்சாயத்து தலைவர் எல்லப்பன் மற்றும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, கடந்த ஆண்டு மழை பெய்து விவசாயம் பாதிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு மழை இல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசு உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *