இங்க என்ன பண்றீங்க….? வசமாக சிக்கிய இருவர்…. மடக்கி பிடித்த போலீஸ்…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தென்னம்பட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை காவல்துறையினர் பிடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் காவல்துறையினரை பார்த்ததும் 3 பேரும் தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். அவர்களின் 2 பேரை காவல்துறையினர் பிடித்துவிட்டனர்.

இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பிடிபட்ட வாலிபர்கள் நவீன் குமார் மற்றும் சதீஷ்குமார் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். அதன்பின் இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய மற்றொரு வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *