இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நிலையில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்கள் எடுத்த நிலையில் நேற்று முன்தினம் இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 348 ரன்கள் எடுத்தது.

இதைத்தொடர்ந்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. இதில் இரண்டாவது ஓவரில் டிம் சவுதி பந்து வீசிய நிலையில் அதனைஇங்கிலாந்து வீரர் அடித்தார். இந்தப் பந்தை நியூசிலாந்து அணியின் சிறந்த பீல்டரான கிளென் பிலிப்ஸ் கேட்ச் பிடித்தார். மேலும் அவர் பாய்ந்து வந்து அந்த பந்தை கேட்ச் பிடித்த நிலையில் தற்போது அந்த வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.