இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் இடதுகை சுழல் பந்துவீச்சாளர் டெரெக் அண்டர்வுட்(78) இன்று காலமானார். 1963ஆம் ஆண்டு தனது 21 வது வயதில் இங்கிலாந்து அணியில் விளையாட தொடங்கிய அவர், 1987 ஆம் ஆண்டு வரை சுமார் 24 ஆண்டுகள் விளையாடியுள்ளார். 86 டெஸ்ட் போட்டிகளில் இவர் 297 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவருடைய மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.