ஆ.ராசாவுக்கு தடை…? – தேர்தல் ஆணையம் அதிரடி…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் தனிநபர் விமர்சனம் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்பதால் முதல்வர் பழனிசாமி குறித்த ஆ.ராசாவின் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அதிகாரி சத்ய பிரதா சாஹு அறிவித்துள்ளார். இதனால் ஆ.ராசா தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தடைவிதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.