ஆ.ராசாவிற்கு நோட்டீஸ்… தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு..!!

முதலமைச்சர் பழனிசாமி குறித்து அவதூறாக பேசிய காரணத்திற்காக திமுக எம்பி ஆ ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். நிலையில் நீலகிரி எம்.பி  தேர்தல் பிரச்சாரத்தின்போது முதலமைச்சர் பழனிசாமி தொடர்பாக தவறாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த புகார்கள் தொடர்பாக அறிக்கை தர தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது.

அதன்படி மாவட்ட தேர்தல் அதிகாரி, காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடமிருந்து அறிக்கை பெறப்பட்டன. இதையடுத்து தேர்தல் ஆணையத்திற்கு அந்த அறிக்கை நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் திமுக எம்பி ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் 31ஆம் தேதி இன்று மாலை 6 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.