காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி சமீபகாலமாக தொழிலாளிகளை சந்தித்து பேசுகிறார். குறிப்பாக செருப்பு தைக்கும் தொழிலாளி, சுமை தூக்கும் தொழிலாளர்கள் போன்றோர்களை சந்தித்து வீடியோ பதிவிடுகிறார்.

அந்த வகையில் தற்போது பிரபலமான ஒரு உணவகத்திற்கு சென்றுள்ளார். அவர் கெவண்டர்ஸ் கடைக்கு சென்ற நிலையில் அங்குள்ள ஊழியர்களுடன் பேசி மகிழ்ந்து உரையாடினார். பின்னர் அவர் கோல்டு காபி தயாரித்தார். மேலும் இது தொடர்பான வீடியோவை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது