பிரபல இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷ் பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரியப் போவதாக இருவரும் அறிவித்தனர். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்தனர்.

இந்த நிலையில் மலேசியாவில் ஜிவி பிரகாஷ் நடத்தும் கச்சேரியில் சைந்தவி கலந்து கொண்டு பாட இருப்பதாக கூறியிருந்தார். அதன்படி அந்த கச்சேரியில் பங்கேற்ற சைந்தவி பிறை தேடும் இரவிலே பாடலை ஜிவி பிரகாஷுடன் இணைந்து பாடியுள்ளார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.