ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசியால் நேர்ந்த பாதிப்பு.. வலியால் துடிக்கும் பெண்.. அருகில் வர பயப்படும் மகன்..!!

பிரிட்டனில் ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை செலுத்திகொண்ட பெண் ஒருவருக்கு தோல் முழுவதும் சிகப்பு நிறமாக மாறி சுமார் இரண்டு வாரங்களாக வலியால் துடித்து வருகிறார்.

ஸ்காட்லாந்தில் வசிக்கும் 41 வயது பெண் Leigh King. இவருக்கு ஆட்டிச குறைபாடு கொண்ட Aiden(13) என்ற மகன் உள்ளார். இதனால் Leighக்கு கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை செலுத்த முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. எனவே இவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை செலுத்தியுள்ளார்.

தடுப்பூசி செலுத்தப்பட்ட சில நேரங்களிலியே அவரின் முகம், கை, முதுகு, மார்பு மற்றும் கால்கள் என்று அனைத்து இடங்களிலும் சிவப்பு புள்ளிகள் உருவாகின. தடுப்பூசி செலுத்தப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்த பின்பும் வலியால் அவதிப்பட்டு வருகிறார் Leigh. என் மகனை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக தடுப்பூசி செலுத்திக்கொண்ட என்னால் அவனை பார்க்கக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

இவரது மகன் Aiden, தன் அம்மாவின் தோற்றத்தை கண்டு அஞ்சி அருகில் வர பயப்படுகிறாராம். இதனால் தற்போது Aiden ஐ பார்த்துக்கொள்ள வேறு ஒரு நபரை Leigh ஏற்பாடு செய்திருக்கிறார். மேலும் தடுப்பு செலுத்தியவர்கள் நூறில் ஒருவருக்கு இவ்வாறு தோல் பிரச்சினைகள் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக Leigh பலமுறை மருத்துவமனைகளுக்குச் சென்றும்  பலனளிக்கவில்லை. எனவே தோல் நோய் சிகிச்சை நிபுணர் ஒருவரை சந்திக்கயிருக்கிறார்.